Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

படுக்கைக்கு அழைத்தார்... என்னை தாக்கினார் - நடிகர் மீது நடிகை ராணி புகார்

Advertiesment
படுக்கைக்கு அழைத்தார்... என்னை தாக்கினார் - நடிகர் மீது நடிகை ராணி புகார்
, திங்கள், 15 அக்டோபர் 2018 (16:13 IST)
துணை நடிகர் சண்முகராஜன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தாக்கியதாகவும் நடிகை ராணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

 
மீ டூ விவகாரம் தற்போது நாடெங்கும் பற்றி எரிகிறது. பாலிவுட்டில் நானா பாடேகர் உள்ளிட்ட சில நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சிக்கியுள்ளனர். அதேபோல், கோலிவுட்டில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல்  புகாரை கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து பல்வேறு துறையை சேர்ந்த பல பெண்களும், தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து தற்போது வெளிப்படையாக கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில், நாட்டாமை படத்தில் டீச்சர் வேடத்திலும், விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் ‘ஓ போடு’ பாடலுக்கு நடனமாடியவருமான நடிகை ராணி காவல் நிலையத்தில் துணை நடிகர் சண்முகராஜன் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார்.
 
ஒரு விளம்பர படத்தில் நடித்த போது சண்முகராஜன் தன்னை படுக்கைக்கு அழைத்தார். அவரின் ஆசைக்கு நான் இணங்கவில்லை என்றதும் எனது உடலில் அங்கும் இங்கும் தொட்டு எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தார். என் கணவர் இதை தட்டிக் கேட்டபோது சண்முகராஜன் என்னை தாக்கினார் என ராணி புகார் அளித்துள்ளார்.

நடிகர் சண்முகராஜன் விருமாண்டி, எம்டன் மகன், சண்டக்கோழி உள்ளிட்ட பல தமிழ் படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’சர்ஜிக்கல் கெத்து’ இந்தியாவுக்கே மிரட்டல் விடுக்கும் பாகிஸ்தான்...