Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நயன்தாராவை பற்றி நான் அப்படி கூறவில்லை : விவேக் அந்தர் பல்டி

நயன்தாராவை பற்றி நான் அப்படி கூறவில்லை : விவேக் அந்தர் பல்டி

Advertiesment
Actor vivek
, வியாழன், 27 அக்டோபர் 2016 (21:06 IST)
நடிகை நயன்தாரா பற்றி கருத்து தெரிவித்தது பற்றி நடிகர் விவேக் விளக்கம் அளித்துள்ளார்.


 

 
நடிகர் கார்த்திக் நடித்துள்ள காஷ்மோரா படவிழாவில் பேசிய விவேக் “ இப்படத்தின் நாயகி நயன்தாரா விழாவிற்கு வந்திருக்க வேண்டும். ஆனால் வரவில்லை. அதற்கு செண்டிமெண்டாக ஒரு விளக்கமும் தயாராக வைத்துள்ளார். அதாவது அவர் நடிச்ச படத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் அந்த படம் தோல்வி அடைந்துவிடுகிறதாம். இப்படி ஒரு விளக்கத்தை வெளியிடும் நயன்தாராவை எந்த தயாரிப்பாளர்தான் விழாவிற்கு கூப்பிடுவார்கள்?.
 
விழாவில் பங்கேற்க விரும்பாத அவர் இன்னொன்றும் செய்திருக்கலாம். தான் நடிக்கும் படத்தின் கடைசி சம்பளத்தை வாங்கினால் அந்த படம் தோல்வி அடைந்துவிடுகிறது என்று கூறினால் தயாரிப்பாளரகள் எவ்வளவு சந்தோசம் அடைவார்கள்? என்று பேசினார்.
 
இந்நிலையில் அப்படி பேசியது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “பட விழாக்களில் நடிகைகள் கலந்து கொள்ள வேண்டும் என்றுதான் கூறினேன். நயன்தாராவை குறிப்பிட்டு எதுவும் கூறவில்லை. நான் அவரின் மிகப்பெரிய ரசிகன். அவரை பற்றி இதற்கு முன் நான் கூறிய கருத்துக்களைப் பாருங்கள்.
 
அவருக்கு எதிராக கருத்து கூற வேண்டும் என்பது என் நோக்கமல்ல. எனவே மீடியாக்கள் தவறான செய்திகளை வெளியிட வேண்டாம்” 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மக்களின் பிரார்த்தனையால் ஜெயலலிதா மீண்டும் வருவார் -பாரதிராஜா நம்பிக்கை