Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மக்களின் பிரார்த்தனையால் ஜெயலலிதா மீண்டும் வருவார் -பாரதிராஜா நம்பிக்கை

மக்களின் பிரார்த்தனையால் ஜெயலலிதா மீண்டும் வருவார் -பாரதிராஜா நம்பிக்கை

Advertiesment
Bharathiraja
, வியாழன், 27 அக்டோபர் 2016 (20:24 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா  பூரண உடல் நலம் பெற்று மக்கள் பணியாற்ற வருவார் என்று இயக்குனர் பாரதிராஜா கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் பற்றி விசாரிக்க, சினிமா இயக்குனர் பாரதிராஜா இன்று அப்பல்லோ மருத்துவனைக்கு வந்தார். அங்கு சில அமைச்சர்கள் மற்றும் மருத்துவர்களிடம் அவர் பேசினார். அதன்பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது :
 
முதலமைச்சர் பூரண நலம் பெற்று மக்கள் பணியாற்ற விரைவில் வருவார்.  மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, மக்களின் பிரார்த்தனையால்தான் அவர் குணமடைந்தார். அதுபோலவே, முதல்வரும் ஜெயலலிதாவும் நடுத்தரமக்களின் பிரார்த்தனையால் குணமடந்துள்ளார்.
 
மீண்டும் அவர் ஆட்சியில் அமர்ந்து சிறப்பாக ஆட்சி செய்து நமது இதயத்தில் இடம் பிடிப்பார்” என்று அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆப்கனிஸ்தானில் அமெரிக்கா அதிரடி தாக்குதல்