நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 2 வது சுரங்கப் பணிகளுக்கான மேல்வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் சுரங்க விரிவாகப் பணிகளில் என்எல்சி நிறுவனம் ஈடுபட்டு வரும் நிலையில், இதற்கு நடிகர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
கடலூர் மாவட்டம், நெய்வேலி NLC இந்தியா லிமிடெட் நிறுவனம் 2வது பழுப்பு நிலக்கரி சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக விளை நிலங்களை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
குறிப்பாக அறுவடைக்கு தயாராக இருக்கும் விளை நிலங்களை அழித்து, கையகப்படுத்தும் NLC நிர்வாகத்தை கண்டிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம்
தனது இரண்டாவது பழுப்பு நிலக்கரி சுரங்கத்தை விரிவாக்கம்
செய்வதற்காக அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்களை அழித்து
விளை நிலங்களை கையகப்படுத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.
மேலும் விவசாயிகளுக்கு உறுதுணையாக இந்த அரசு இருக்கும் என மார்தட்டிக் கொள்ளும் முதல்வர் மு.க. ஸ்டாலின், நெற்பயிர்களை அழித்து அவசர அவசரமாக விரிவாக்கம் பணிகளை மேற்கொண்டு வரும் என்.எல்.சி நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படுவது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்.
நெற்பயிர்களை அழித்து விளை நிலங்களை கையகப்படுத்தும் பணியை என்எல்சி நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும். இல்லையென்றால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை ஒன்று திரட்டி தே.மு.தி.க சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என என்.எல்.சி நிர்வாகத்தை எச்சரிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.