Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 8 April 2025
webdunia

தமிழக அரசின் இந்தப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது- அண்ணாமலை.

Advertiesment
Annamalai
, புதன், 26 ஜூலை 2023 (14:11 IST)
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின்  2 வது சுரங்கப் பணிகளுக்கான வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில்  சுரங்க விரிவாகப் பணிகளில் என்எல்சி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதை தமிழக  பாஜக தலைவர் அண்ணாமலை வன்மையாக கண்டித்துள்ளர்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில்’’, நெய்வேலியில், தமிழக அரசு, ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அத்துமீறி, பயிரிடப்பட்டுள்ள நிலங்களை பாழ்படுத்தி வருவதாக, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழக அரசின் இந்தப் போக்கு, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இது குறித்து, நெய்வேலி என்எல்சி நிறுவனத் தலைவர் திரு. பிரசன்னகுமார் அவர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, இந்தப் பிரச்சினையில் விவசாயிகள் பாதிக்கப்படாதவாறு, சுமூகமான தீர்வு எட்டுமாறு  தமிழக பாஜக  சார்பாகக் கேட்டுக் கொண்டேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

கடும் எதிர்ப்பை மீறி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தற்போது என்.எல்.சி சுரங்க விரிவாக்கப் பணிகள் தொடங்கியுள்ளன.  கடலூர் வளையமாதேவியில் 8 ஏக்கர் பரப்பளவில் விளை நிலங்களை அழித்து வாய்க்கால் வெட்டும் பணி தற்போது நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேராபத்து விளைவிக்கும் சுரங்கத்துக்கான விரிவாக்கப் பணிகளை உடனே கைவிட வேண்டும்- டி.டி.வி.தினகரன்