தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூருக்கு சென்ற போது அவரை பார்க்க பலரும் கூடியதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலரும் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தற்போது சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே கடந்த 13ம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென சிபிஐ விஜய்க்கு சம்மன் அனுப்பியிருந்தது.
அதை ஏற்று 12ம் தேதியே அவர் டெல்லி கிளம்பி சென்றார். அப்போது விஜய் கருப்பு சட்டை அணிந்து சென்றார். அரசியலில் எதிர்ப்பை காட்டவே கருப்பு சட்டையை அணிவார்கள். ஆனால் விஜய் என்ன நோக்கத்தோடு கருப்பு சட்டை அணிந்து சென்றார் என்பது யாருக்கும் தெரியவில்லை.
விஜயை பொறுத்தவரை அரசியலுக்கு வந்ததிலிருந்து வெள்ளை சட்டை மட்டுமே அணிந்து வெளியே வருகிறார். ஆனால் 12ம் தேதி டெல்லி சென்றபோது கருப்பு சட்டை அணிந்திருந்தார். 13ம் தேதி டெல்லியில் அலுவலகத்தில் விசாரணை சந்தித்த விஜய் பொங்கலுக்கு பின் மீண்டும் ஒரு நாள் விசாரணைக்கு வருகிறேன் என கேட்டுவிட்டு சென்னை வந்தார்.
தற்போது ஜனவரி 19ம் தேதியான நாளை அவர் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சிபிஐ சம்மன் அனுப்பியிருக்கிறது. இதையடுத்து தற்போது விஜய் சென்னை விமான நிலையம் சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்து காரில் இருந்து இறங்கி உள்ளே செல்லும் முன் அங்கு நின்று கொண்டிருந்த செய்திகளார்களை நோக்கி தம்சப் சிம்பலை காட்டிவிட்டு சென்றார். அதோட அப்போது வெள்ளை சட்டையும் அணிந்திருந்தார்.