Publish Date: Sat, 23 Mar 2019 (18:22 IST)
Updated Date: Sat, 23 Mar 2019 (18:25 IST)
வைகைப்புயல் வடிவேல் காமெடியில் நிச்சயம் இவரும் இருப்பார். அந்த அளவுக்கு தமிழக மக்கள் மனதில் காமெடியனாகப் பதிந்தவர் நடிகர் விஜய் கணேஷ்.
இவர் தற்போது மெகா கூட்டணியான அதிகவில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது. அதிமுகவில் தேர்தல், பிரச்சாரத்திற்கு எப்போதுமே நட்சத்திரப் பேச்சாளர்களாக சினிமா நடிகர்கள் இருப்பார்கள்.
இந்நிலையில் தற்போது நடிகர் விஜய்கணேஷும் முதலமைச்சர் எடப்பாடியை சந்தித்து அவ்ர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது :
நான் எம்.ஜிஆர். ஜெயலலிதா ஆஇயோரின் ரசிகன் அதனால் அதிமுகவில் இணைந்துள்ளதாகக் கூறினார். அனைத்து தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.