உதயநிதி ஸ்டாலின் சமீபகாலமாக திமுக நடத்தும் கண்டன பொதுக்கூட்டங்கள், அரசியல் கூட்டங்கள் ஆகியவற்றில் கலந்துக்கொண்டு வருகிறார்.
அதோடு, திமுக போட்டியிடும் 20 மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதி ஆகியவற்றுக்கு நேரடி பிரச்சாரத்திற்கு தயாராகியுள்ளார். இதனையடுத்து உதயநிதியின் பிரச்சார பயணம் ஏப்ரல் 16 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அந்த வகையில், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கெளதம சிகாமணியை ஆதரித்து, சேலம் மாவட்டம் ஆத்தூரில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியது பின்வருமாறு, திமுகவின் தேர்தல் அறிக்கையை பார்த்து எதிர்க்கட்சிகள் பயந்துபோய் உள்ளது. தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டணி மெகா கூட்டணி இல்லை மோசடி கூட்டணி.
மோடியை வீட்டுக்கு அனுப்பி விட்டு திமுக கூட்டணி சார்பில் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்க வேண்டும். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பொள்ளாச்சி வழக்கில் அதிமுக பிரமுகருக்கு தொடர்பு உள்ளது, இதனை பகிரங்கமாக கூறுவதால் முடிந்தால் என் மீது வழக்கு போட்டு பாருங்கள் எனவும் கெத்தாக பேசியுள்ளார்.