எடப்பாடியாரை சந்தித்த நடிகர் விஜய்? உடனிருந்த அமைச்சர்! – பேசிக்கொண்டது என்ன?

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2020 (09:48 IST)
நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ரிலீஸாக உள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் சந்தித்து பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விஜய் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் “மாஸ்டர்”. கடந்த ஏப்ரலிலேயே வெளியாக வேண்டிய இந்த படம் கொரோனா காரணமாக பல மாதங்களாக வெளியாகாமல் இருந்த நிலையில் பொங்கலுக்கு முன்னதாக இந்த படத்தை வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

மேலும் கொரோனா காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னரே திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில் பெரிய அளவில் படங்கள் எதுவும் வெளியாகாததால் திரையரங்குகளும் மாஸ்டர் ரிலீஸ எதிர்நோக்கி காத்துள்ளன.

இந்நிலையில் நடிகர் விஜய், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 13 அன்று மாஸ்டரை வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில் ஓவர்சீஸ் திரையரங்குகளில் திரையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் 100% திரையரங்குகளை ஒதுக்குதல் தொடர்பாக கோரிக்கை விடுத்திருக்கலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உட்பட 28 மாவட்டங்களில் கனமழை.. இன்றிரவு ஜாக்கிரதை மக்களே..!

ஒரு கப் டீயை விட மொபைல் டேட்டா விலை குறைவு: டிஜிட்டல் வளர்ச்சி குறித்து பிரதமர் மோடி

'ராகுல் காந்தியை சந்திக்க விஜய்க்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை': கே.எஸ். அழகிரி விளக்கம்

15 தொகுதிகள் இல்லையென்றால் போட்டியிட மாட்டோம்: பீகார் NDA கூட்டணியை மிரட்டும் கட்சி..!

அமீபா நோயால் 9 வயது சிறுமி மரணம்.. கோபத்தில் டாக்டரை அரிவாளால் வெட்டிய தந்தை..!

அடுத்த கட்டுரையில்
Show comments