Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேர்தலில் நடிகர் விஜய் தனித்து போட்டியா? மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை..!!

vijay

Senthil Velan

, வியாழன், 25 ஜனவரி 2024 (11:30 IST)
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கம் என பெயர் மாற்றம் செய்து 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்துள்ளார்.
 
கடந்த 2021 22-ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் சுயேச்சையாக போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் கணிசமான வெற்றியை பதிவு செய்தனர். ஒரு சில இடங்களில் அதிமுக, நாம் தமிழர் போன்ற கட்சிகளை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்தனர்.
 
இதை அடுத்து நடிகர் விஜய், பல்வேறு மக்கள் நல பணிகளை செய்து வருகிறார். சமீபத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.  
 
இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகளுடன்,  சென்னை பனையூரில் உள்ள இல்லத்தில் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தினார். மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணி வைப்பதா என்பது குறித்தும் நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

AI தொழில்நுட்பத்தில் கருணாநிதி! திமுகவின் மாஸ் தேர்தல் பிரசார திட்டம்..!