Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அன்னைக்கு பெரியார் போட்ட விதைதான்..! – நடிகர் சிவக்குமார் புகழாரம்!

Advertiesment
அன்னைக்கு பெரியார் போட்ட விதைதான்..! – நடிகர் சிவக்குமார் புகழாரம்!
, செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (11:04 IST)
சமீபமாக முன்னாள் திரை பிரபலங்கள் பேசும் அரசியல் கருத்துக்கள் வைரலாகி வரும் நிலையில் தற்போது நடிகர் சிவக்குமார் பேசியுள்ளதும் வைரலாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் திரை பிரபலங்கள் பேசும் அரசியல் கருத்துக்கள் வைரலாகும் அதே நேரம் சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகின்றன. முன்னதாக இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த பரபரப்பு அடங்குவதற்குள் பிரபல இயக்குனரும், நடிகருமான பாக்கியராஜ் விழா ஒன்றில் பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என பேசியது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் தான் திராவிட கொள்கையின் ஆதரவாளர் என கூறி அவர் வீடியோவும் வெளியிட்டுள்ளார்.
webdunia

இந்நிலையில் தற்போது நடிகர் சிவக்குமார் கடந்த சில காலமாக திராவிட கொள்கைகளை ஆதரித்து பேசி வருகிறார். முன்னதாக அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிவக்குமார், குமரியில் வள்ளுவர் சிலை அமைத்ததற்காக கலைஞரின் பாதம் தொட்டு வணங்க வேண்டும் என பேசியிருந்தார்.

இந்நிலையில் தற்போது பெரியார் குறித்து பேசியுள்ள அவர் “ஒடுக்கப்பட்ட மக்கள் இன்று ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், மருத்துவர், பொறியாளர் என அனைத்து துறைகளிலும் பணிபுரிந்து வருவதற்கு அன்று பெரியார் போட்ட விதைதான் காரணம். காலங்கள் செல்ல செல்ல பெரியார் மீது மரியாதை கூடிக்கொண்டே போகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதுரை மேம்பால விபத்து; கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.3 கோடி அபராதம்!