Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் ராமராஜனுக்கு என்ன ஆச்சு?: ஒன்னும் ஆகலன்னு அவரே சொல்லிடாரு!

நடிகர் ராமராஜனுக்கு என்ன ஆச்சு?: ஒன்னும் ஆகலன்னு அவரே சொல்லிடாரு!

Advertiesment
நடிகர்
, திங்கள், 7 நவம்பர் 2016 (15:31 IST)
கடந்த இரு தினங்களாக நடிகர் ராமராஜனுக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது முன்னாள் மனைவி நளினி அவரை அருகில் இருந்து கவனித்து வருவதாகவும் செய்திகள் பரவின.


 
 
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்தவர் நடிகர் ராமராஜன். இவர் அரசியல் குதித்து அதிமுக சார்பில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக வலம் வருகிறார். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளதால் மனவேதனையை அடைந்த ராமராஜனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்பட்டது.
 
இந்த செய்தி வேகமாக பரவ அதிர்ச்சியடைந்த பிரபலங்களும், திரையுலகினரும் அவருக்கு போன் போட்டு விசாரிக்க தொடங்கினர். இதனையடுத்து அவருக்கு நெஞ்சு வலி என்று வெளியான தகவல் வதந்தி என தெரியவந்துள்ளது. நான் நலமாக உள்ளேன், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட மதுரையில் உள்ளேன் என அவர் தனக்கு போன் செய்து விசாரிப்பவர்களிடம் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெடித்துச் சிதறியது ரிலையன்ஸ் - ஜியோ ’லைஃப் மொபைல்'