Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெடித்துச் சிதறியது ரிலையன்ஸ் - ஜியோ ’லைஃப் மொபைல்'

வெடித்துச் சிதறியது ரிலையன்ஸ் - ஜியோ ’லைஃப் மொபைல்'
, திங்கள், 7 நவம்பர் 2016 (15:18 IST)
'ரிலையன்ஸ் - ஜியோ' நிறுவனம் மூன்று மாத இலவச அழைப்பு மற்றும் '4ஜி' இலவச இன்டர்நெட் சேவை வழங்குவதாக அறிவித்தது.
 

 
மேலும், ‘ரிலையன்ஸ் லைஃப் மொபைல்' மற்றும், 'சாம்சங், எல்.ஜி., பேனாசோனிக், அசுஸ்' ஆகிய நிறுவனங்களின் மொபைல் போன்களை வாங்கு வோருக்கும், 'ஜியோ 4ஜி' சிம் கார்டுகளை, இலவசமாக வழங்கி வருகிறது.
 
அதன் மூலமும், அனைத்து தொலைபேசி மற்றும் மொபைல் போன்களுக்கும், மூன்று மாதங்கள் இலவச அழைப்பு வசதியும், இலவச இன்டர்நெட் சேவையும் வழங்கப்படும் என அறிவித்தது.
 
இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தயாரிப்பான ’லைஃப் மொபைல்’ போன் வெடித்து சிதறியதாகவும், ஆனால், தனது குடும்பத்தினர் மயிரிழையில் உயிர் தப்பியதாகவும் தன்விர் சாதிக் என்பவர் மூன்று புகைப்படங்களுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
 
webdunia

 
ஆனால், அவர் எந்த மாடல் போனை பயன்படுத்தினார் என்றோ எப்படி வெடித்துச் சிதறியது என்பது குறித்தோ தகவல்கள் வெளியிடவில்லை.
 
இதற்கடுத்து, அவருடைய பதிவிற்கு ரிலையன்ஸ் லைஃப் மொபைல் நிறுவனம் பதிலளித்துள்ளது. ”இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவது தொடர்பாக விவாதித்து வருகிறோம். இதன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பிறகு உங்களுக்கு பதிலளிக்கிறோம்; என்று தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சபரி மலையில் பெண்களுக்கு அனுமதி - கேரள அரசு அதிரடி முடிவு