Publish Date: Sat, 02 May 2026 (11:38 IST)
Updated Date: Sat, 02 May 2026 (11:42 IST)
சினிமா துறையிலிருந்து பலரும் அரசியலுக்கு வந்திருந்தாலும் நடிகர் விஜய் அதில் கவனிக்கத்தக்க ஒரு அரசியல்வாதியாக பார்க்கப்படுகிறார். நடிகர் திலகம் சிவாஜிக்கு கிடைக்காத, டி.ராஜேந்திருக்கு கிடைக்காத, கே.பாக்கியராஜுக்கு கிடைக்காத, சரத்குமாருக்கு கிடைக்காத, அவ்வளவு ஏன் விஜயகாந்துக்கே கிடைக்காத ஆதரவு விஜய்க்கு மக்களிடம் கிடைத்திருக்கிறது.
ரசிகர்கள் மட்டுமல்லாமல் இளைஞர்களும், புதிய வாக்காளர்களும், பெண்களும், பொது மக்களும் கூட விஜய் வரவேண்டும் என நினைக்கிறார்கள். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கடந்த பல வருடங்களாகவே அதிமுக மற்றும் திமுக போன்ற கட்சிகளுக்கு மாறி மாறி வாக்களித்த பலரும்கூட இந்த முறை விசில் சின்னத்தில் வாக்களித்திருக்கிறார்கள். அதுதான் ஒரு பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது..
இந்நிலையில், விழா ஒன்றில் பேசிய நடிகர் ராதாரவி விஜயின் பெயரை சொல்லாமல் சினிமாவிலிருந்து ஒரு சகோதரர் இந்த பெரிய இயக்கங்களுக்கு எல்லாம் போட்டியாக வந்திருக்கிறார். சினிமாவில் எந்த நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும்.. இப்ப நான் பேசிகிட்டு இருக்கேன்.. இந்த மேடையை விட்டு கீழே இறங்கும்போது திடீர்னு நான் கூட தலைவன் ஆயிடுவேன்.. என்னை யாரும் எதுவும் கேட்க முடியாது என சொல்லியிருக்கிறார்..