Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிதற்றாதீர்கள்.. பல்லிளிக்கிறது உங்கள் கீழ்புத்தி - ஹெச்.ராஜாவுக்கு பிரசன்னா பதிலடி

Webdunia
திங்கள், 23 அக்டோபர் 2017 (13:42 IST)
நடிகர் விஜயின் மதத்தை வைத்து அவரை விமர்சனம் செய்து வரும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவிற்கு சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


 

 
விஜய் நடித்து சமீபத்தில் வெளியான மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி குறித்து தவறான கருத்துகள் கொண்ட வசனம் இடம் பெறுவதாக தமிழிசை சவுந்தராஜான் போர்க்கொடி தூக்கினார். அவரைத் தொடர்ந்து ஹெச்.ராஜா, அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்தனர். முக்கியமாக ஜோசப் விஜய் என தொடர்ந்து அழைத்து வருகிறார் ஹெச்.ராஜா. 
 
இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் ‘உண்மை கசக்கும்’ என்ற தலைப்பில், விஜயின் வாக்களர் அட்டை மற்றும் லெட்டர் பேட் ஆகியவற்றை வெளியிட்டிருந்தார். அதில் விஜயின் பெயர் ‘ஜோசப் விஜய்’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, விஜய் கிறிஸ்துவராக இருப்பதால்தான் மோடியை எதிர்க்கிறார் என அவர் கருத்து தெரிவித்து வருகிறார்.
 
இந்நிலையில் நடிகர் பிரசன்னா தனது டிவிட்டர் பக்கத்தில் “பாஜகவுக்கு முதல் எதிரி நீங்களும் உங்கள் மாநிலத் தலைவரும்தான் . இருப்பை காட்டிக்கொள்ள பிதற்றாதீர். பல்லிளிக்கிறது உங்கள் கீழ்புத்தி” என பதிலடி கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments