இரட்டை இலை செத்துவிடும்: டிடிவி தினகரனின் ஆவேச பேட்டி

Webdunia
திங்கள், 23 அக்டோபர் 2017 (13:25 IST)
அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த விசாரணை இன்று டெல்லி தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெறவுள்ளது. அனேகமாக இன்று இந்த பிரச்சனைக்கு முடிவு கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது



 
 
இந்த நிலையில் சற்றுமுன்னர் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், இரட்டை இலை விஷயத்தில் தேர்தல் ஆணையம் எங்களுக்கு சாதகமாக முடிவெடுக்கவில்லையெனில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் ஒருவேளை இரட்டை இலை ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிக்கு சென்றல் அந்த இரட்டை இலை செத்துவிடும் என்றும் கூறினார்.
 
மேலும் 'தமிழகத்தின் அரிஸ்டாட்டில் ஜெயகுமார் உள்ளிட்டோர் துதிபாடிகளாக உள்ளதாகவும் சட்டமன்ற உறுப்பினர்களை தக்க வைத்து கொள்ளவே ஆட்சி நடப்பதாகவும் தினகரன் தெரிவித்தார். ஆர்.கே.நகர் தொகுதியில்  போட்டியிடும் வேட்பாளர் குறித்து ஆட்சிமன்ற குழு முடிவெடுக்கும் என்றும், ஆட்சிமன்ற குழு விரும்பினால் ஆர்.கே.நகரில் போட்டியிட தயார் என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments