Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டொமேட்டோ சொமேட்டோ வித்தியாசம் என்ன? குசும்புக்கார பார்த்திபனின் விளக்கம்

Advertiesment
டொமேட்டோ சொமேட்டோ வித்தியாசம் என்ன? குசும்புக்கார பார்த்திபனின் விளக்கம்
, திங்கள், 17 டிசம்பர் 2018 (12:09 IST)
நடிகர் பார்த்திபனின் டிவீட்டால் பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சொமாட்டோ அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் மதுரையில் சொமாட்டோ ஃபுட் டெலிவரி ஊழியர் ஒருவர் தன் பையில் கஸ்டமருக்கு கொடுக்க வேண்டிய உணவுப் பொட்டலத்தை ஒவ்வொன்றாக எடுத்து அதில் உள்ள உணவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சாப்பிடுகிறார். அதிகமாக சாப்பிட்டால் தெரிந்துவிடும் என்பதற்காக ஒவ்வொரு பொட்டலத்திலும், கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சாப்பிட்டு விட்டு ஒன்றும் தெரியாதது போல அங்கிருந்து செல்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
webdunia
 
இதனையடுத்து சொமாட்டோ நிறுவனம் அந்த ஊழியரின் செயலுக்காக மன்னிப்பு கேட்டது. மேலும் அந்த ஊழியரை பணிநீக்கம் செய்தது.
 
இந்நிலையில் நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் டொமேட்டோவிற்கும் சொமாட்டோவிற்கு உள்ள வித்தியாசம் இது என ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். முழுதாக இருந்தால் டொமாட்டோ, கடித்திருந்தால் சொமாடோ என பதிவிட்டிருக்கிறார் பார்த்திபன். இவரின் கருத்திற்கு பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடங்க மறுக்கும் ஸ்டெர்லைட் நிறுவனம்: உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்