Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அந்த காமுகர்களின் ஆணுறுப்பை அறுத்தெறியுங்கள் - நடிகர் பார்த்திபன் ஆவேசம்

Advertiesment
அந்த காமுகர்களின் ஆணுறுப்பை அறுத்தெறியுங்கள் - நடிகர் பார்த்திபன் ஆவேசம்
, புதன், 18 ஜூலை 2018 (10:50 IST)
12 வயது சிறுமியை சீரழித்த அந்த 17 காமுகர்களின் ஆணுறுப்பை அறுத்து எரியுங்கள் என நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.
சென்னை அயனாவரம் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வரும் ஒருவரின் 12 வயது மகளை, அவர் காது கேட்கும் திறன் இல்லாதவர் என தெரிந்தும் அங்கு பணிபுரியும் லிஃப் ஆபரேட்டர், செக்யூரிட்டி, பிளம்பர் என 17 பேர் கடந்த  6 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
webdunia
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் அந்த அயோக்கியர்கள் மீது போக்சோ சட்டம் மற்றும் கொலை முயற்சி உட்பட பல பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் நாடெங்கும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
webdunia
இந்நிலையில் இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் சிறுமியை சீரழித்தவர்களின் ஆணுறுப்பை அறுத்தெறியுங்கள் என்று தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் மருத்துவமனையில் கருணாநிதி - காரணம் என்ன?