Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதை பொருள் விவகாரத்தில் இன்னொரு தமிழ் ஹீரோவுக்கு தொடர்பா? சம்மன் அளிக்க திட்டம்..!

Mahendran
செவ்வாய், 24 ஜூன் 2025 (12:15 IST)
போதைப்பொருள் விவகாரத்தில் ஏற்கனவே நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இன்னொரு தமிழ்த் திரைப்பட ஹீரோவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு சம்மன் அனுப்பக் காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
நடிகர் ஸ்ரீகாந்த் சட்டவிரோதமாக போதைப்பொருளை வாங்கி பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் மேலும் சில நடிகர், நடிகைகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் தொடர்பு என கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனை அடுத்து, போதைப்பொருள் பயன்படுத்திய புகாரில் நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது நடிகர் கிருஷ்ணா கேரளாவில் உள்ள படப்பிடிப்புக்கு சென்றுள்ளதால், கேரளாவுக்கே சென்று அவருக்கு சம்மன் அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் திரையுலகில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments