சத்தியபாமா கல்விக் குழுமங்களின் தலைவர் ஜேப்பியரின் மரணத்திற்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் வெளியிட்டுள்ளார்.
சத்தியபாமா கல்விக்குழுமங்களின் தலைவர் ஜேப்பியார் (85) சென்னையில் கல்வித் தந்தை என்று அழைக்கப்படுகிறைார். மேலும், சமூக சேவையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில், சென்னை சோழிங்கநல்லூரில் சத்தியபாமா பல்கலை வளாக வீட்டில் வசித்து வந்த அவருக்கு நேற்று மீண்டும் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, உடனே தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
இதுபற்றி சமூக வலைத்தளத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் “ஜேப்பியாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஜேப்பியாரின் மரணத்தால் மாணவர்களுக்கு நல்ல கல்வியாளரை இழந்த இழப்பு. எங்களைப் போன்றவர்களோ நல்ல நண்பரை, நலம் விரும்பியை இழந்துள்ளோம்” என்று வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளார்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்