Publish Date: Thu, 23 Apr 2026 (08:20 IST)
Updated Date: Thu, 23 Apr 2026 (08:53 IST)
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் அஜித்குமார். விஜய்க்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும், அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகராகவும் அஜித் இருக்கிறார்.
கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து கார் ரேஸில் ஈடுபட்டு வரும் அஜித் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே நடித்தார்..
குட் பேட் அக்லி படம் வெளியாகி ஒரு வருடம் ஆகியும் அவரின் அடுத்த பட அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில்தான், தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் நேற்று கார் ரேஸுக்காக பெல்ஜியத்தில் இருந்த அஜித் நேற்று விமானம் மூலம் சென்னை வந்தார். இன்று காலை முதல் ஆளாக திருவான்மியூரில் அவர் தனது வாக்கை பதிவு செய்தார்.
வெள்ளை நிற கோட் சூட், கருப்பு கண்ணாடி அணிந்து ஸ்டைலாக காரில் இறங்கிய அஜித் தனது செல்போனில் தன்னைத்தானே செல்பி வீடியோவும் எடுத்துக்கொண்டார்.. அதன்பின் வரிசையில் நின்று வாக்களித்தார். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த பல தேர்தல்களாகவே எங்கிருந்தாலும் அஜித் சென்னைக்கு வந்து ஓட்டு போடும் பழக்கத்தை பின்பற்றி வருகிறார்.. அதுவும் முதல் ஆளாக வந்து ஓட்டு போட்டு விடுகிறார்.. திருவான்மியூரில் ஓட்டு போடும் பூத்துக்கு அஜித் காலை 6.45 மணிக்கு வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது..
Video Courtesy to Polimer News