Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’’நடிகர் அஜித்தின் தக்‌ஷா குழு வெற்றி’’...உலக நாடுகள் இடையே ஆன போட்டியில் அசத்தல்...

’’நடிகர் அஜித்தின் தக்‌ஷா குழு  வெற்றி’’...உலக  நாடுகள் இடையே ஆன போட்டியில் அசத்தல்...
, சனி, 23 பிப்ரவரி 2019 (17:59 IST)
ஏரோ இந்தியா கண்காட்சியின் போது நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டியில் நடிகர் அஜித்தின் தக்‌ஷா குழு 3 பிரிவுகளில் சிறப்பான வெற்றி பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
பிரபல நடிகரான அஜித் சினிமாவை தாண்டி கார் ரேஸ், பைக் ரேஸ், சமையல், புகைப்படம் என பல்துறை கலைஞராக உள்ளார்.
 
இந்நிலையில் கடந்த ஆண்டு சென்னை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் அமைத்துள்ள வான்வெளி ஆராய்ச்சி மையமான தக்‌ஷா குழுவின் ஆலோசகரான நியமிக்கப்பட்டார். இக்குழுவினர் உருவாக்கிய  ஆளில்லா விமானங்கள் அதிக நேரங்கள் பறந்து ஏற்கனவே சாதனை படைந்திருந்தன. ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாண்ட் பகுதியில் நடைபெற்ற மெடிக்கல் எக்ஸ்பிரஸ் யுஏவி சேலஞ்ச் - 2018 போட்டியில் கலந்து கொண்ட தக்‌ஷா குழுவினர் சர்வதேச அளவில் இரண்டாம் பிடித்து சாதித்தனர்.
webdunia
இந்நிலையில் தற்போது பெங்களூரில் சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் மத்திய அரசு சார்பில் கண்காட்சியும் நடந்து வருகிறது. பெங்களூரில் உள்ள எலஹங்கா விமான படை தளத்தில் நடைபெறும் இக்கண்காட்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விமானங்கள் பங்கேற்றன. இதில் ட்ரோன் ஒலிம்பிங் என்ற பெயரில் போட்டிகள் நடைபெற்றன. இதில் அஜித்தின் தக்‌ஷா குழுவினர் கலந்து கொண்டு மூன்று பிரிவுகளில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி ரசிகர்களின் கதி இதுதான்: அதிமுக அமைச்சர் அசால்ட் பேச்சு