Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாயமான 7000 டன் நெல் மூட்டைகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

Advertiesment
edapadi palanisamy
, செவ்வாய், 30 மே 2023 (18:59 IST)
தர்மபுரியில் அரசு குடோனில் வைத்திருந்த 7,000 டன் நெல் மாயமாகி உள்ள சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளாருமான எடப்பாடி பழனிசாமி தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’ஒவ்வொரு நாளும் ஏமாற்றத்தை மட்டுமே தமிழக மக்களுக்கு பரிசளித்து வரும் இந்த விடியா திமுக ஆட்சியில், தற்போது   தர்மபுரியில் அரசு குடோனில் வைத்திருந்த 7,000 டன் நெல் மாயமாகி உள்ளதாக செய்திதாள்களில் வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

சர்க்கரையை எறும்பு தின்றது, சாக்கை கரையான் அரித்தது என்று ஒரு காலத்தில் கணக்கு காட்டியவர்கள், 7000 டன் நெல்லுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

மக்கள் வரிப்பணத்தில் உல்லாசப் பயணம் சென்றிருக்கும் இந்த சர்க்கஸ் அரசின் முதல்வர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு நெல் மூட்டைகள் மாயமாவதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மாயமான 7000 டன்
நெல் மூட்டைகளை மீட்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் ஊழியரை திட்டி, தாக்கிய பயணி