Publish Date: Thu, 02 Jan 2020 (14:43 IST)
Updated Date: Thu, 02 Jan 2020 (15:35 IST)
நெல்லைக் கண்ணன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் உள்நோக்கம் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது :
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை குறித்து நெல்லைக் கண்ணன் பேசியதன் ஆழம் பார்த்துத்தான் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்லூரிக்குள் குண்டு வீசப்படும் என ஹெச். ராஜா கூறிய கருத்து குறித்து யாராவது புகார் அளித்ததால், அது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். ஹெச்.ராஜா பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிரது.