Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐசிஐசிஐ முன்னாள் தலைவருக்கு ஜாமின்: மும்பை ஐகோர்ட் உத்தரவு

santha
, திங்கள், 9 ஜனவரி 2023 (18:39 IST)
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சாந்தா கோச்சார் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கி மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
வீடியோகான் நிறுவனத்துக்கு முறைகேடாக வங்கி கடன் வழங்கப்பட்டதாகவும் அந்த வங்கி கடன் சாந்தா கோச்சார் கணவர் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதாகவும் சிபிஐ குற்றம்சாட்டியது. 
 
இதனை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் சாந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர் என்பதும் அவர்களது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் ஜாமீன் கேட்டு சாந்தா கோச்சார் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த விசாரணையில் இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம் இருவருடைய பாஸ்போர்ட்டையும் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாடு முன்னேற்றக் கழகம் என்று பெயரை மாற்ற தயாரா?வானதி சீனிவாசன்