திருச்செந்தூர் முருகன் கோவிலில் பரிகாரம் மண்டபம் இடிந்து விழுந்து பெண் பலி

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2017 (10:59 IST)
திருச்செந்தூர் முருகன் கோவிலில் பரிகார மண்டபம் இன்று இடிந்து விழுந்ததில் ஒரு பெண் பலியாகியுள்ளார். மேலும், பலர் காயமடைந்துள்ளனர்.

 
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள்ள வள்ளி குகை அருகே உள்ள பிரகார மண்டபம் இன்று காலை 9.30 மணியளவில் இடிந்து விழுந்தது. அதில், ஒரு பெண் பலியாகி விட்டார் என செய்தி வெளியாகியுள்ளது. 
 
கார்த்திகை மாதம் என்பதால் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. எனவே, பக்தர்கள் பலர் அதில் சிக்கியியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தற்போது இடிபாடுகளை அகற்றும்பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த சம்பவம் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

SIR படிவத்தை முழுமையாக நிரப்பாவிட்டால் நிராகரிக்கப்படுமா? தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்..!

5 வயது சிறுமியை கடத்தி ரூ.90,000க்கு விற்பனை.. கடத்தியவர் யார் என்பதை அறிந்து பெற்றோர் அதிர்ச்சி..!

என் தந்தை உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை காட்டுங்கள்.. இம்ரான்கான் மகன் ஆவேச பதிவு..!

இறங்கிய வேகத்தில் திடீரென உயர்ந்த தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 560 ரூபாய் உயர்வு..!

வாரத்தின் கடைசி நாளிலும் பங்குச் சந்தை உயர்வு.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments