பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி சமீபத்தில் பாஜக கூட்டணியில் இணைந்தது என்பதும் மீண்டும் பாஜக கூட்டணியின் ஆதரவால் அவர் ஆட்சி அமைத்து அமைத்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்று வந்த நிலையில் தற்போது பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின்படி பீகாரில் பாஜக 17 மக்களவைத் தொகுதிகள் போட்டியிட உள்ளதாகவும் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 16 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகவும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது
மேலும் பாஜக கூட்டணியில் உள்ள லோக் ஜனசக்தி ஐந்து தொகுதிகளிலும் மேலும் இரண்டு அரசியல் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகளும் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது பீகாரில் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.