மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கோவிந்தராஜ் தலைமையிலும், தேர்தல் செலவினப் பார்வையாளர் முன்னிலையில் கட்சி பிரதிநிதிகளுடன் வேட்புமனு தாக்கல் தொடர்பாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் வேட்புமனு தாக்கல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில், தேர்தல் செலவினப் பார்வையாளர் சில் ஆசிஸ் முன்னிலையில் நடைபெற்றது.
மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
வேட்பாளர் தனது வேட்புமனுவினை அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நாளை (26.10.2016 ) முதல் வரும் 2 ம் தேதி ( 02.11.2016) வரை (29.10.2016 மற்றும் 30.10.2016 ஆகிய இரு நாட்கள் விடுமுறை) காலை 11.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை தாக்கல் செய்யலாம்.
வேட்பாளர்கள் வேட்புமனுவினை தாக்கல் செய்ய வரும் போது தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலிருந்து 100 மீட்டருக்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
மேலும் வேட்பாளர்கள் தங்களுடன் நான்கு நபர்களை மட்டுமே உடன் அழைத்து வர வேண்டும் என்றும் தேர்தல் தொடர்புடைய இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் பெற்றுக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட ஆலோசனைகளை வழங்கி தேர்தல் அமைதியாகவும் நேர்மையாகவும் நடைபெற அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷம்., தேர்தல் நடத்தும் அலுவலர் சைபுதீன்., வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன்., செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.