சமஸ்கிருத மொழியை கட்டாயமாக்க முயற்சி செய்யவில்லை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
எட்டாம் வகுப்புவரை அனைத்து மாணவர்களையும் கட்டாயமாக தேர்ச்சி பெறச் செய்வதை மாற்றி, 5-ம் வகுப்புவரை மட்டுமே `ஆல் பாஸ்' திட்டம் பின்பற்றப்படும் என்ற புதிய கல்விக் கொள்கைக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
டெல்லியில் நடைப்பெற்ற புதிய கல்விக் கொள்கை கருத்தரங்கு நடைபெற்றது. அதில், 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி தொடர்பாக அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்று பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
கருத்தரங்கு முடிவடைந்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரகாஷ் ஜவடேகர், சமஸ்கிருத மொழியை கட்டாயமாக்க முயற்சி செய்யவில்லை என்றார்.