Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆவின் குடிநீர் பாட்டில்; பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரம்! – ஆவின் புதிய முயற்சி!

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2022 (13:09 IST)
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் விரைவில் குடிநீர் பாட்டில்களை தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் மாநிலம் முழுவதும் பதப்படுத்தப்பட்ட பால் பாக்கெட்டுகளை மக்களுக்கு விநியோகித்து வருகிறது. மேலும் மாநிலம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் ஆவின் பாலகங்கள் மூலமாக தேநீர், காபி, பாதாம் பால், தயிர், வெண்ணெய், பால்கோவா போன்ற இன்ன பிற ஆவின் தயாரிப்புகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆவின் விரைவில் குடிநீர் பாட்டில்களை தயாரிக்க உள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். அரை லிட்டர் மற்றும் ஒரு லிட்டர் என இரண்டு வகை குடிநீர் பாட்டில்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆவின் பாலகங்கள் மூலமாக விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

அதுபோல ஆவின் நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காக சினிமா விளம்பரங்களை பால் பாக்கெட்டுகளில் அச்சிட்டு விநியோகிப்பது குறித்தும் பேசி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை வெயில் அதிகமாக இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

அவுரங்கசீப்பின் கல்லறை சர்ச்சை தேவையற்றது: ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கருத்து..!

ஈபிஎஸ் , செங்கோட்டையனை அடுத்து பிரதமர் மோடியை சந்திக்கும் ஓபிஎஸ்.. என்ன காரணம்?

வாரத்தின் முதல் வர்த்தக நாளில் சரிந்தது பங்குச்சந்தை.. இன்றைய நிஃப்டி நிலவரம்..!

6 ரூபாய் மதிப்புள்ள Vodafone பங்கை 10 ரூபாய்க்கு வாங்கிய அரசு! 11 ஆயிரம் கோடி நஷ்டம்!?

அடுத்த கட்டுரையில்
Show comments