Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆவின் தயிர், நெய் விலை உயர்வு!

ஆவின் தயிர், நெய் விலை உயர்வு!
, வியாழன், 21 ஜூலை 2022 (11:07 IST)
5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பால் தயிர் மற்றும் நெய் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது.
 
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) அமலுக்கு வந்தது முதலாக பல்வேறு பொருட்களுக்கும் குறிப்பிட்ட அளவிலான ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 18 ஆம் தேதி முதல் சில பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரிவிகிதம் உயர்த்தப்பட்டது.
 
அதன்படி பாக்கெட்டில் அடைக்கப்பட்டு, லேபிள் ஒட்டி விற்கப்படும் உலர்ந்த காய்கறிகள், பழங்கள், பன்னீர், தேன், கோதுமை, பிற தானியங்கள், மீன், இறைச்சி, தயிர், நெய் உள்ளிட்ட பால் பொருட்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது.
 
இதனைத்தொடர்ந்து ஆவின் நிறுபனம் தனது  யிர் மற்றும் நெய் விலையை உயர்த்தியுள்ளது.  1 லிட்டர் நெய்க்கு ரூ.50, 1 லிட்டர் தயிருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது என பால் முகவர்கள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது. 
 
கூடுதல் தகவலாக பேப்பர், ஷார்ப்னர், ஸ்கிம்மர், கரண்டி, எல்.இ.டி விளக்குகள் வரையும் கருவிகள் போன்றவற்றிற்கு ஜிஎஸ்டி 12%ல் இருந்து 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் உலக வரைப்படங்கள், உலக உருண்டை, சுவர் வரைப்படங்கள், நிலபரப்பு படங்கள் உள்ளிட்டவற்றிற்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி.
 
வங்கி காசோலைகளுக்கு 18% ஜிஎஸ்டியும், வாட்டர் ஹீட்டர்களுக்கு 12 சதவீதமும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் ஐசியு தவிர ரூ.5 ஆயிரத்திற்கு மேல் வசூலிக்கும் சிகிச்சை அறைகளுக்கு 5 சதவீதமும், மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு வசதிகளுக்கு 12 சதவீதமும் ஜிஎஸ்டி விதிக்கபட்டுள்ளது. ரூ.1000க்கு மேல் உள்ள ஓட்டல் வாடகை அறைகளுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரளா நீட் தேர்வு விவகாரம்: மேலும் இருவர் கைது!