ஆவின் பால் பொருட்களின் விலை அதிரடி உயர்வு…

Arun Prasath

ஞாயிறு, 15 செப்டம்பர் 2019 (16:44 IST)
ஆவின் பால் விலை உயர்ந்ததை அடுத்து தற்போது ஆவின் பால் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்ந்திருந்த நிலையில், தற்போது ஆவின் பால் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.
அதன் படி 460 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் நெய், 35 ரூபாய் விலையேற்றப்பட்டு தற்போது 495 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ பன்னீர், 400 ரூபாயில் இருந்து, 50 ரூபாய் உயர்ந்து, 450 ரூபாயாக விலையேற்றப்பட்டுள்ளது.

மேலும் ஒரு கிலோ பால் பவுடர், 270 ரூபாயிலிருந்து 320 ரூபாயாக (ரூ 50 உயர்வு) உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ பால்கோவா 500 ரூபாயிலிருந்து 20 ரூபாய் உயர்ந்து 520 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 25 ரூபாயாக இருந்த அரை லிட்டர் தயிர், 27 ரூபாயாக (ரூ 2 உயர்வு) உயர்த்தப்பட்டுள்ளது. அரை கிலோ வெண்ணெய் 230 ரூபாயிலிருந்து 240 (ரூ 10 உயர்வு) ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து.. மீட்பு பணி தீவிரம்