கள்ளக்காதலி வீட்டில் இருந்த கணவனை ... செருப்பால் அடித்த மனைவி...

சனி, 14 செப்டம்பர் 2019 (20:46 IST)
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில், தாலி கட்டிய மனைவியை விட்டு, கள்ளக்காதலியுடன் குடியிருந்த கணவனை, மனைவி செருப்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம்,  மெட்சல் மாவட்டம் அல்வால் என்ற ஊரில் வசித்து வருபவர் கோபால், இவரது மனைவி ஏஞ்சல். இந்தத் தம்பதிக்கு 2 குழந்தைகள் உண்டு. இந்த நிலையில் கோபால் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு கொண்டதாகத் தெரிகிறது.
 
இதுகுறித்து ஏஞ்சல் கேள்விப்பட்டதால் கணவரிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளார். பின் அந்த பெண்ணுடன் தொடர்பு கொள்ள மாட்டேன் என கோபால் வாக்குக் கொடுத்துள்ளார். பின்னர் சில நாட்கள் கழித்து அப்பெண்ணுடன் மீண்டும் தொடர்பு கொண்டுள்ளார் கோபால். அதனால், கோபமடைந்த ஏஞ்சல், தன் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு, அடிக்கடி கோபால் சென்று தங்குகின்ற அந்த பெண்ணின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
 
அங்கு கோபால் இருந்ததால், மனைவியிடம் வசமாகச் சிக்கினார். இதுகுறித்து கோபாலுடமும் , அப்பெண்ணிடமும் கேட்டுள்ளார். அப்போது அந்தப் பெண் ஏஞ்சலிடம் கோபப்பட, அப்பெண்ணைக் காப்பாற்ற கோபால் அவரைச் சுவர்போலத் தடுத்து நின்று கொண்டார்.
 
அதனால்,ஆத்திரம் அடைந்த  ஏஞ்சல் தன் காலணியைக் கழட்டி கோபாலின் முதுகில் அடித்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸார்  வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் வீடுகளுக்கு அருகில், தெருவில் நடமாடும் சிங்கங்கள் ...வைரலாகும் வீடியோ