Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பால் பண்ணையிலிருந்து கொரோனா பரவவில்லை! – ஊழியர் இறப்புக்கு ஆவின் விளக்கம்!

பால் பண்ணையிலிருந்து கொரோனா பரவவில்லை! – ஊழியர் இறப்புக்கு ஆவின் விளக்கம்!
, புதன், 3 ஜூன் 2020 (11:55 IST)
சென்னையில் ஆவின் பால் பண்ணை ஊழியர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், அவருக்கு கொரோனா பால் பண்ணையிலிருந்து பரவவில்லை என ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் காணப்பட்டாலும் சென்னையில் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் சென்னை மாதவரத்தில் உள்ள ஆவின் பண்ணையில் மெஷின் ஆப்பரேட்டராக பணிபுரிபவர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரம் உயிரிழந்தார்.

இதனால் மாதவரம் பால் பண்ணையில் பால் வர்த்தகம் செய்ய முகவர்கள் அஞ்சியதாக தெரிகிறது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மாதவரம் ஆவின் பால் பண்ணை நிர்வாகம், இறந்த நபருக்கு பால் பண்ணையில் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றும், கொரோனா பாதிக்கும் முன்னரே சம்பந்தப்பட்ட நபர் உடல்நலக்குறைவு காரணமாக ஒரு மாதகாலமாக விடுப்பில் இருந்ததாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு