Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!
, புதன், 3 ஜூன் 2020 (09:18 IST)
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான இன்று மு.க.ஸ்டாலின் மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் பிறந்தநாள் இன்று அவரது கட்சியினரால் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் முன்னரே கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் பிறந்தநாளை திமுகவினர் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி எளிமையாக கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின். உடன் உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு, துரைமுருகன் உள்ளிட்டோரும் சென்று அவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மரியாதை செலுத்த அவருடன் குறைந்த பட்ச ஆட்களே சென்றது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசு சொல்வதை கேட்டிருந்தால் கொரோனா பரவியிருக்காது! – எடப்பாடியார் வருத்தம்!