Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜயை முடக்க பாக்குறாங்க!.. அதனால்தான் மேடையில் அழுதார்.. ஆதவ் அர்ஜுனா ஆதங்கம்!..

Advertiesment
vijay
நடிகர் விஜய் துவங்கிய தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்கவிருக்கிறது.. விஜய் அடிப்படையில் அவர் ஒரு பிரபலமான நடிகர் என்பதாலும், அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதாலும், குறிப்பக இளைஞர்களின் ஆதரவு அவருக்கு இருப்பதாலும் தமிழக அரசியலில் அவர் ஒரு மாற்றத்தை உருவாக்குவார் என பலரும் எதிர்பார்க்கிறார்கள்.

ஒருபக்கம் தவெக பொதுக்கூட்டங்களில் விஜய் ஆவேசமாக பேசி வருகிறார். குறிப்பாக திமுகவை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். அதுவும் சில நாட்களுக்கு முன்பு வேலூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய போது ‘எனக்கு மக்களுக்கும் இடையே இருப்பது ஒரு எமோஷனலான உறவு.. சென்சிட்டிவ் சென்டிமென்ட்’ என்று அவர் பேசினார்.. அப்போது அதற்கு மேல் பேச முடியாமல் சில வினாடிகள் அவர் கண்கலங்கினார்..

இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா ‘மக்களையும், விவசாயிகளையும் நேரில் சந்திக்க வேண்டும் என்பதுதான் எங்கள் தலைவரின் ஆசை.. ஆனால் தன் வருகையால் மக்களின் பாதுகாப்புக்கு சிறு அச்சுறுத்தலும் வந்துவிடக்கூடாது என்பதாலேயே அவர் முடங்கி போயிருக்கிறார்..

மக்களை நேரில் காண முடியவில்லை என நினைத்துதான் அவர் சமீபத்தில் கண்கலங்கினார்.. முதல்வரும், துணை முதல்வரும் எந்த அளவுக்கு அனுமதி தராமல் அவரை முடக்குகிறார்கள்’என்று மக்களுக்கு தெரியும்’ என்று கூறியிருக்கிறார்..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.2135 கோடி மதிப்பில் சுரங்கப்பாதை.. இனி வயநாடு மக்களுக்கு பயமில்லா பயணம்..!