Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமண ஆசையால் வாலிபர் செய்த வெறிச்செயல்

Webdunia
சனி, 13 அக்டோபர் 2018 (11:18 IST)
விழுப்புரத்தில் தந்தை தனக்கு திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் தந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்தவர் கந்தன்(65). இவரது மனைவி பொடி(60). இவர்களுக்கு கோபி (35) என்ற மகன் உள்ளான்.
 
இந்நிலையில் கோபி தனது பெற்றோரிடன் தனக்கு வயதாகிக்கொண்டே போவதாகவும் விரைவில் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படியும் வற்புறுத்தியுள்ளார். அவரின் பெற்றோரும் பல்வேறு இடங்களில் பெண் பார்த்து வந்தனர். ஆனால் ஜாதகம் செட் ஆகவில்லை என தெரிகிறது.
 
இந்நிலையில் கோபி மீண்டும் தனது தந்தையிடம் திருமணம் குறித்து சண்டையிட்டுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு பின் கைக்கலப்பாக மாறியது. ஒரு கட்டத்தில் கோபி தனது தந்தையின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் கந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து கோபியை கைது செய்தனர். தந்தையை மகன் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்