Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

75 வயது கிழவியை கற்பழிக்க முயன்ற வாலிபர் கைது

Advertiesment
75 வயது கிழவியை கற்பழிக்க முயன்ற வாலிபர் கைது
, வெள்ளி, 5 அக்டோபர் 2018 (08:02 IST)
திண்டிவனத்தில் 75 வயது மூதாட்டியை வாலிபர் ஒருவர் கற்பழிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனம் மேல்சிவிரி கிராமத்தை சேர்ந்தவர் மீனாட்சியம்மாள்(75). மீனாட்சியம்மாளின் கணவர் சில வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்ட நிலையில் இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
 
இந்நிலையில் நேற்று இவரது வீட்டிற்குள் புகுந்த வாலிபர் மீனாட்சியம்மாளை கற்பழிக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், அந்த காமுகனை அடித்து துவைத்து போலீஸில் ஒப்படைத்தனர்.
 
போலீஸார் அந்த அயோக்கினை விசாரித்ததில் அவன் திண்டிவனம் அடுத்த விழுக்கம் காலனியை சேர்ந்த முருகன்(35) என்பது தெரியவந்தது. தாய் வயதுடைய பெண்மணியிடம் இவ்வாறு கீழ்த்தரமாக நடந்து கொண்ட இவனுக்கு கொடூர தண்டனை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தை தொடர்ந்து கேரளாவிற்கும் ரெட் அலர்ட் - பொதுமக்கள் கடும் பீதி