Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரக்தியில் பெண் போலீஸ் அதிகாரி தூக்கிட்டுத் தற்கொலை

Webdunia
திங்கள், 10 செப்டம்பர் 2018 (15:43 IST)
சேலத்தில் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் விரக்தியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் போடிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த புவனேஸ்வரி என்பவர், காவலராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் கவுதமன் என்பவருக்கும் கடந்த 2014 -ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
 
திருமணமான இரண்டு மாதத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக புவனேஸ்வரி கணவரைப் பிரிந்து தன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். 
 
இந்நிலையில் கவுதமன் 2வது திருமணம் செய்யவிருப்பதாக புவனேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இதுகுறித்து கேட்க புவனேஸ்வரி கவுதமன் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் கவுதமனின் தாயார் புவனேஸ்வரியை திட்டி அனுப்பியுள்ளார்.
 
இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி இன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் புவனேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
புவனேஸ்வரியின் தற்கொலைக்கு காரணமாக கவுதமன் மீதும் அவர் குடும்பத்தார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புவனேஸ்வரியின் பெற்றோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாராவியை அதானிக்கு தாரை வார்த்து விட்டீர்கள்- மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்..!

முல்லை பெரியாற்று அணையை கண்காணிக்க கேரள பொறியாளர்களா? அன்புமணி ஆவேசம்

தாமிரபரணி வெள்ளத்தை வேடிக்கை பார்க்க்கும் பொதுமக்கள்.. செல்பி வேண்டாம் என எச்சரிக்கை..!

அரசு மருத்துவமனையில் எலி கடித்து 10 வயது சிறுவன் பலி? அதிர்ச்சி சம்பவம்..!

தென் மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 200 மி.மீ.க்கும் மேல் மழைப்பொழிவு! பெருகெடுத்து ஓடும் வெள்ளம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments