ஈரோட்டில் செல்போன் பேசியபடி கிணற்றருகே நடந்திகொண்டிருந்த பெண் கால்தவறி கிணற்றுள் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த பெண் சங்கீதா என்ற இளம்பெண் பெட்ரோல் பங் ஒன்றில் வேலைபார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று பணி முடிந்து வீடு திரும்பிய அவர், வீட்டினருகே இருக்கும் கிணற்றின் பக்கத்தில் நின்றுகொண்டு போன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி கிணற்றில் விழுந்துவிட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த இருவர் சங்கீதாவை காப்பாற்ற கிணற்றுக்குள் குதித்தனர். ஆனால் கிணற்றில் படிகெட் இல்லாததால் அவர்கள் மூவரும் கிணற்றில் சிக்கிக்கொண்டனர்.
இதனையடுத்து மீட்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், போராடி மூன்று பேரை மீட்டனர். மீட்கப்பட்ட அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்று வருகிறது.