ஜெய்பூரில் நடந்த விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, விளையாட்டுத்துறையில் இளைஞர்களை அரசு ஊக்குவித்து வருவதாக உரையாற்றினார்.
ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்பூரில் ஜெய்பூர் மாகாகேல் என்ற விளையாட்டு விழா ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது.
துப்பாக்கி சுடுதலில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை படைத்த ராஜ்யவர்தன் சிங் ஜெய்ப்பூர் ஊரகத் தொகுதி மக்களவை உறுப்பினராக உள்ள நிலையில், அவரால் இந்த விழா நடந்து வருகிறது.
கடந்த ஜனவரி 12 ஆம் தேதி இப்போட்டி ஆரம்பித்த நிலையில், 450 கிராம ஊராட்சிகள், 8 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 6400 இளைஞர்கள் இதில் பங்கேற்றனர்.
இப்போட்டியில் பங்கேற்றவர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார்.
திறமையின் கொண்டாட்டமாகப் பார்க்கப்படும் ஜெய்ப்பூர் மகாகேல் விளையாட்டு விளையாட்டின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும்; விளையாட்டுத் திறன் களைபூக்குவிக்கிறது என்றும், விளையாட்டுத்துறையில் இளை ஞர்களை அரசு ஊக்குவித்து வருவதாகபவும் கூறினார்.