Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு பெண்ணால் வீரனை உருவாக்க முடியும் - ஆடிட்டர் குருமூர்த்தி

Webdunia
ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2019 (13:32 IST)
சென்னையில் உள்ள பிரபல  தனியார் மருத்துவமனையின் 10 ஆம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு பொருளாதாரத்தில் பெண்களின் தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்வில் துக்ளக் வார இதழில் ஆசிரியர் குருமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது :
 
பெண்ணிற்கும் பெண்மைக்கும் வித்தியாசம் இருக்கிறது. பெண்மையே இல்லாத பெண்களும் இருக்கிறார்கள் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். எல்லா பெண்களையும் தெய்வம் என சொல்ல மாட்டேன். அவ்வாறு விஞ்ஞானப்படி ஏற்றுக்கொள்ள என் மனம் மறுக்கிறது. இதில் பெண்மை உள்ள பெண்கள் தான் தெய்வம். அவர்கள்தான் தெய்வம். 
 
இப்போது, பெண்மையை நாம் இழந்து வருகிறோம். அதுதான் அபாயமாக உள்ளது. ஒரு பெண்ணை உருவாக்க முடியாது ஆனால் பெண்மையை பெண்ணில் மட்டுமே உருவாக்க முடியும். ஆனால் ஒரு பெண்ணால் வீரனை, அறிவாளியை உருவாக்க முடியும் . இதில் முக்கியமானது பெண்மையை பெண்ணால் மட்டுமே உருவாக்க முடியாது இதற்கு சூழ்நிலை மிக அவசியமானது என்று தெரிவித்தார்.
 
மேலும், நம் நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து உயர காரணமாக இருப்பது குடும்பம்தான். இக்குடும்பத்தின் மையமாக பெண் உள்ளாள். நம் இந்திய பெண்கள் திறமையானவர்கள், இணையற்றவர்கள். இதில் பெண்மை உள்ள பெண்கள் முப்பது சதவீதம் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சவுக்கு சங்கர் மீதான 13 வழக்குகள்: சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

தமிழர்களின் தேசப்பற்று பத்தி உங்களுக்கு தெரியாது! - அமித்ஷாவிடம் சீறிய கனிமொழி!

ஆள்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சி.. சத்தீஷ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது..!

3 மாதங்கள் டிஜிட்டல் கைது செய்யப்பட்ட பெண் டாக்டர்.. ரூ.19 கோடி மோசடி.. இந்தியாவின் மிகப்பெரிய மோசடியா?

இனி UPI PIN தேவையில்லை.. பயோமெட்ரிக் மூலம் பணம் செலுத்தலாம்! - புதிய நடைமுறை விரைவில்!

அடுத்த கட்டுரையில்
Show comments