Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொருளாதாரம் வளர்சி பெற ’வருமான வரியை ஒழிக்க வேண்டும்’ - சுப்பிரமணிய சுவாமி

பொருளாதாரம் வளர்சி பெற ’வருமான வரியை ஒழிக்க வேண்டும்’ - சுப்பிரமணிய சுவாமி
, ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2019 (12:06 IST)
பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வருமான வரியை ஒழிக்க வேண்டுமென பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்  சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.
நம் நாடு என்றுமில்லாத அளவுக்கு தற்போது பொருளாத மந்த நிலையை சந்தித்து வருகிறது. சமீபத்தில் ஆட்டோ மொபைல் நிறுவனங்களில் பெரும்பாலானவர்களுக்கு வேலை  பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும்,உணவு பொருட்கள் துறையில் பணியாற்றுவோருக்கு சில ஆயிரம் பேரை நிறுவங்கள் வேலை விட்டு நீக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.
 
இந்நிலையில் இதற்கு உலகநாடுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையில் தாக்கம் தான் இந்தியாவிலும் எதிரொலிப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
 
இதுதொடர்பாக சண்டிகரில் பேட்டியளித்த சுப்பிரணிய சுவாமியிடம், நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடவடிக்கைகள் ஆக்கப்பூர்வமான பலன் தருமா என கேட்கப்பட்டது.
 
அதற்கு அவர் கூறியது : வருமான வரியை ஒழிக்க வேண்டும். அதேசமயம் நிரந்த வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தை 9 % குறைக்க வேண்டும். இதைச் செயல்படுத்தினால் பொருளாதாரத்தில் மாற்றம் காணமுடியும் என்று தெரிவித்தார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உதயநிதி தலைமையில் இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டம்: நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்