மதுவிற்கு அடிமையான கணவனை போட்டுத்தள்ளிய மனைவி

Webdunia
திங்கள், 11 ஜூன் 2018 (14:48 IST)
காஞ்சிபுரம் அருகே மதுவிற்கு அடிமையான கணவனை அவரது, மனைவியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் திருமுருகன். இவரது மனைவி சுந்தரி. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளது. மதுவிற்கு அடிமையான திருமுருகன், வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு மனைவியிடம் சண்டை போட்டு வந்துள்ளார்.
 
இந்நிலையில் நேற்றும் திருமுருகன் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திருமுருகனின் மனைவி சுந்தரி, அம்மிக்கல்லை எடுத்து கணவரின் தலையில் போட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த திருமுருகன் சம்பவ இடத்தி்லே பலியானார்.
 
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், படுகொலை செய்யப்பட்ட திருமுருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சுந்தரியை கைது செய்துள்ள போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் செய்த தவறிற்கு, அவர்களது குழந்தைகள் அனாதையாய் நிற்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையன் பின்னால் இருப்பது திமுக?!... கொளுத்திப்போட்ட நயினார் நாகேந்திரன்!...

அதிமுகவை ஒன்றிணைக்க சொன்னதே பாஜகதான்!.. போட்டு உடைத்த செங்கோட்டையன்!...

நீதிமன்ற அவமதிப்பு மனு.. பதிலளிக்கத் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

மகாராஷ்டிரா பெண் வழக்கறிஞர் பீகார் தேர்தலில் வாக்களித்தாரா? வைரல் பதிவு..!

மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் போதாது.. கிரிக்கெட் வீரர் ஷமியின் மனைவி மனுதாக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments