Publish Date: Sat, 09 Jun 2018 (11:20 IST)
Updated Date: Sat, 09 Jun 2018 (11:24 IST)
நெல்லையில் பூ வியாபாரியின் மகன் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு சகிப்புத்தன்மை, பொறுமை என்பது இருப்பதே இல்லை. எதற்கெடுத்தாலும் அவசரம். எதையுமே உடனடியாக அடைய வேண்டும் என்ற எண்ணம். அப்படி அவர்கள் நினைத்தது நடக்காவிடில், தற்கொலை செய்துகொள்ளும் தப்பான முடிவை எடுக்கின்றனர்.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பூ வியாபாரி, தனது மகனான செந்தில்பாலனை, கஷ்டப்பட்டு தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தார்.
ஆனால் தந்தையின் கஷ்டத்தை உணராத செந்தில்பாலன், காதல் வலையில் சிக்கி, பின் காதல் தோல்வியால் மனமுடைந்தார். இதனால் விரக்தியடைந்த செந்தில்பாலன் தற்கொலை செய்ய முடிவு செய்து, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், விசாரித்து வருகின்றனர். கஷ்டப்பட்டு வளர்த்த மகன், தற்கொலை செய்து கொண்டதால் அவரது தந்தை கதறி அழுதது பார்ப்போரின் நெஞ்சை கலங்க வைத்தது.