நாளை மதியத்திற்குள் இன்னோவா திரும்ப வரவேண்டும்: நாஞ்சில் சம்பத்துக்கு அதிமுக தலைமை கட்டளை

Webdunia
செவ்வாய், 16 ஜனவரி 2018 (23:59 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது நாஞ்சில் சம்பத்துக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவியை அளித்ததோடு, அவருக்கு இன்னோவா காரையும் கொடுத்து அசத்தினார் ஜெயலலிதா. ஆனால் ஒரு பேட்டியின்போது சர்ச்சைக்குரிய பதிலை கூறியதால் அவரது பதவி பறிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் ஆனவுடன் நாஞ்சில் சம்பத்துக்கு மீண்டும் கொடுத்தார்.

இந்த நிலையில் ஜெயலலிதா கொடுத்த இன்னோவா காரை நாளை மதியத்திற்குள் அதிமுக தலைமையகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் இல்லையேல் போலீஸ் புகார் அளிக்கப்படும் என்றும் அதிமுக தலைமை நாஞ்சில் சம்பத்துக்கு தகவல் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து தனது வட்டாரத்தில் கூறிய நாஞ்சில் சம்பத், 'இந்த இன்னோவா கார் எனக்கு அம்மா கொடுத்தது. என்னவோ இவர்கள் சொந்த பணத்தில் கொடுத்தது போல திரும்ப கேட்கின்றார்களே! இவ்வளவு தரக்குறைவாக அரசியல் செய்கிறதே அதிமுக' என்று புலம்பியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

துபாய் விமான கண்காட்சியில் இந்தியாவின் தேஜஸ் விபத்து: விமானி பரிதாப பலி

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மதுரையில் மெட்ரோ ரயில் ஓடும்: செல்லூர் ராஜூ

விஜய் எங்க வீட்டுப்பிள்ளை.. கோத்துவிடாதீங்க!... பிரேமலதா விளக்கம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments