Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேரோடு சாய்ந்த ஆலமரம் திடீரென எழுந்து நின்றதால் பரபரப்பு

வேரோடு சாய்ந்த ஆலமரம் திடீரென எழுந்து நின்றதால் பரபரப்பு
, திங்கள், 8 அக்டோபர் 2018 (19:08 IST)
ஒரு மரம் வேரோடு சாய்ந்துவிட்டது என்றால் கிட்டத்தட்ட அந்த மரம் அவ்வளவுதான். ஆனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் வேரோடு சாய்ந்த ஒரு ஆலமரம் திடீரென நிமிர்ந்து நின்றதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பாவூர் என்ற கிராமத்தில் சக்தி வாய்ந்த பச்சையம்மன் மற்றும் முனீஸ்வரன் கோயில் உள்ளாது. இந்த கோயிலின் பின் புறத்தில் சுமார் 25 ஆண்டு பழமையான ஆலமரம் இருந்தது.

இந்தா பிரமாண்டமான ஆலமராம் கடந்த ஆண்டு பெய்த கனமழையின்போது மிகவேகமாக அடித்த காற்றில் வேரோடு சாய்ந்தது. இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள மக்கள் இந்த மரத்தின் கிளைகளை வெட்டி விற்பனை செய்ய ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் திடீரென இந்த மரத்தின் அடிப்பகுதி மட்டும் திடீரென  எழுந்துள்ளது. இதனை ஆச்சரியத்துடன் பார்த்த அந்த பகுதி மக்கள் இந்த மரத்துக்கு சக்தி உள்ளதாக கருதி மஞ்சள் துணி கட்டி, மாலை அணிவித்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த வழிபாட்டின்போது ஒரு பக்தர் சாமி வந்து ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிரிப்பின் சூட்சமம் என்ன? வைரலாகும் ஈபிஎஸ் - மோடி புகைப்படம்!