கலாஷேத்ரா விவகாரத்தில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி பேட்டி அளித்துள்ளார்.
கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் புகார் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தவில்லை என தகவல் வெளியானது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது மாநில மகளிர் ஆணையம் விசாரணை செய்து வருகிறது.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் பாலியல் தொந்தரவுள்ளதாக மாணவிகள் குற்றம் காட்டியுள்ளதாகவும் கல்லூரி நிர்வாகம் தொடர்ச்சியாக மாணவிகளின் குற்றச்சாட்டை கண்டுகொள்ளாததால் மாணவிகள் போராட்டம் நடத்தியதாகவும் குமாரி தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் புகார் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக இன்று அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும் மகளிர் ஆணைய தலைவர் குமாரி பேட்டி அளித்துள்ளார்.
இந்த நிலையில் கலாசத்ரா இயக்குனர் ரேவதி இன்று மகளிர் ஆணையத்தில் ஆஜராகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.