Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனை காப்பாற்றிய ராணுவ வீரர்

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (16:00 IST)
நீலகிரி மாவட்டம் பந்தலூரில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனை ராணுவ வீரர் ஒருவர் காப்பாற்றினார்.

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அத்திகுன்னா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  அத்திகுன்னா பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது சாபிக்கின் மகன் சாபிக் (7 வயது) , அந்த ஆற்றில் குளிக்கச் சென்றிருந்தார்.  அப்போது, சிறுவன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.  பொதுமக்கள் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்தும் முடியவில்லை.

இந்த நிலையில், மத்திய துணை ராணுவ படை வீரர் ஜேம்ஸ் ஆற்றில் குதித்து நீண்ட துரம் வெள்ளத்தில் நீந்தி, சிறுவன் சாபிக்கை பத்திரமாக மீட்டு காப்பாற்றினார்.

ராணுவ படை வீரர் ஜேம்ஸுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments