Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விருத்தாசலத்தில் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை..

Advertiesment
விருத்தாசலத்தில் பள்ளி மாணவி  ஒருவர் தற்கொலை..
, செவ்வாய், 26 ஜூலை 2022 (15:36 IST)
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பள்ளி மாணவி ஒருவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர்  பள்ளி மாணவிகளின்  மரணம் பரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஒரு பிளஸ் 2 மாணவி வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

நேற்று காலையில் பள்ளி சென்ற மாணவி சிவகாமி,   மாதம் தோறும் நடத்தப்படும் தேர்வை எழுதியுள்ளார். அதன்பின், பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த  மாணவி,  நேற்றிரவு 9 மணியளவில் தன் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து,தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

அதன்பின், பெற்றோர் மாணவிக்கு இறுதிச் சடங்கு செய்ய முயன்றுள்ளார். இதுபற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் மாணவியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாணவர்களின் தொடர் மரணங்களைத் தடுக்கவும் – சீமான் கோரிக்கை!